புதன், 22 ஜூன், 2011

இட்லியும் பிட்சாவும்

கணினி நிறுவனத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் யோசித்ததுண்டு எப்படி இவ்வளவு விலை கொடுத்து பிட்சா சாப்பிடுகிறார்கள் என்று !

அன்று நான் வாங்கிய சம்பளம் ஏனோ 7000 சொச்சம் ( நாங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் ) !
சாப்பாட்டுக்கு இவ்வளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று தினம்தோறும் அலுவலகத்துக்கு சென்ற நாட்கள் பல !
அப்போதெலாம் 3 * இட்லி = 12 ரூ.
ஒரு நாளைக்கு அதிகபச்சம் 60 ரூ செலவாகும்.
அப்போது என்பது 5 வருடங்களுக்கு முன்னால் மட்டுமே ! ( கால சக்கரம் சுழலும் வேகத்திற்கு ஐந்து வருடம் என்பது இருபது வருடங்களுக்கு சமம் என்றாகி விட்டது )
இன்று என் வாழ்க்கை தரம் இட்லியில் இருந்து பிட்சாவுக்கு மாறியதை நினைத்து கவலை கொள்கிறேன். 250 ரூ கொடுத்து பிட்சா வாங்க யோசிப்பதே இல்லை.
ஐம்பது ஆயிரத்தை தாண்டிய சம்பளம் செலவு செய்யும் தைரியத்தை தந்து விட்டதை நினைத்து வருத்தம் கொள்கிறேன்.
பணம் எனக்குள் கொடுத்த மாற்றத்தை நினைத்து

எனக்கு பிட்சா வேண்டாம் இனி இட்லி போதும் !!!